டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது
New Delhi: தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்தினை பாதித்துள்ளது.
டெல்லி சின்னமான மிண்டோ பாலத்தின் அடியில் சாலையின் அருகே ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
டிராக் மேன் இந்த உடலை கண்டுபிடித்துள்ளார். “நான் பணியிலிருந்தபோது இந்த உடலைக் கண்டேன். கீழே வந்து, நீந்தி அதை மீட்டெடுத்தேன். உடல் ஒரு பஸ் முன் மிதந்து கொண்டிருந்தது.” என அவர் கூறியுள்ளதான ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 5:30 மணி வரை, சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் 4.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாலம் வானிலை நிலையம் 3.8 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, “தில்லி-என்.சி.ஆரின் சில பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேசிய வானிலை ஆய்வு மையம் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.