தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், ‘வெப்பச் சலனம் காரணாம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்று தகவல் தெரிவித்துள்ளது.