This Article is From Sep 18, 2019

பீகாரில் கனமழை : மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு!!

தொடர் மழை காரணமாக மொத்தம் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பீகாரில் கனமழை : மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு!!

வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Patna:

பீகாரில் கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மதியம் முதல் இன்று காலை வரை அங்கு கனமழை பெய்துள்ளது. 

உயிரிழப்பு குறித்து பீகார் பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கயா மற்றும் கைமூர் மாவட்டங்களில் தலா 3 பேரும், பாட்னா, போஜ்பூர், கிழக்கு சம்பரான், சிவன், அர்வால் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கதிகார், ஜெனாபாத் மாவட்டங்களில் ஒருவரும் உயிரிழந்திருக்கின்றனர். 

நேற்று மதியம் தொடங்கிய கனமழை 18 மாவட்டங்களில் இன்று காலை வரை வெளுத்து வாங்கியது. பாட்னாவில் 95.5 மி.மீ., மழை அதிகபட்சமாக பதிவாகி இருக்கிறது. 

18 மாவட்டங்களில் 102 ப்ளாக்குகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நிவாரண பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

.