This Article is From May 28, 2020

கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருபத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்

கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னைய்ப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது
  • தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
  • அதேபோல மேற்கு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்,

கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருபத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் முற்பகல் 11:30 முதல் பிற்பகல் 3:30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.