Read in English
This Article is From Oct 05, 2018

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகம், கர்நாடகத்துக்கும் அலெர்ட்!

கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்

Advertisement
தெற்கு

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம், வானிலை மையம்

Thiruvananthapuram:

கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதேபோல கர்நாடகம் மற்றும் தமிழகத்தகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தான், கேரளாவில் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள வானிலை மைய இயக்குநர், ‘அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும். இது குறித்து மாவட்ட வாரியாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 9 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு கேரளாவில் 21 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மிக கன மழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அன்று தமிழகத்துக்கு வானிலை மையம், ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல கர்நாடக மாநிலத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம், கன மழை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. 

Advertisement

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழை காரணமாக, 493 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் கோடி அளவிலான சொத்துகள் சேதமடைந்தன. கேரளா இன்னும், தன் பழைய நிலைமைக்கு வரப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த முறை பெய்ய உள்ள கன மழைக்கு கேரள அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. 

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை மற்றும் புதுச்சேரியில் இருக்கும் பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement