யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
New Delhi: யமுனை ஆற்றில் ஏற்கனவே நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், அரியானா மாநிலத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் வருவதால் ஆற்றில் நீரின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.
முன்னெச்சரிக்கையாக யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆற்றில் தண்ணீரின் அளவு 205.33 மீட்டர். தற்போது நீரின் அளவு 205.36 மீட்டரை தாண்டியுள்ளது.
இதற்கிடையே அரியானா மாநிலத்தில் ஹத்னி குண்ட் அணையில் இருந்து 1.43 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீரின் அளவு உயர்ந்து வருகிறது.
வெள்ளம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி உள்பட வட மாநிலங்களில் பருவமழை நன்றாக பெய்ததால் யமுனை உள்பட நீர் ஆதாரங்கள் நிரம்பியுள்ளன. பல ஆறுகளில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.