"சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்"
ஹைலைட்ஸ்
- தென் மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ளது
- தமிழக மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
- நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது
தென் மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம், ‘தென் மேற்குப் பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்,
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தக் காற்று மாற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கரூர் மவட்டத்தின் பரமத்தியிலும் கன்னியாகுமரியின் குழித்துறையிலும் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நகரில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும்' எனத் தெரிவித்துள்ளது.