This Article is From Apr 10, 2020

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை!

திருவள்ளூர், பூவிருந்தவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை!

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை!

ஹைலைட்ஸ்

  • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை!
  • அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்து வருகிறது.

சென்னையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியது.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் ஆங்காங்கே 30-40 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பெரியமேடு, சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், பூவிருந்தவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கடலோர பகுதியான கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது.

.