This Article is From Nov 18, 2019

பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில்: திக்குமுக்காடும் கேரளா!

மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவ.16ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில்: திக்குமுக்காடும் கேரளா!

நவ.16ம் தேதி நடை திறந்தது முதல் தற்போது வரை 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளனர்.

Sabarimala:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார், திக்குமுக்காடி வருகின்றனர்.  இதனால், பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொள் வேண்டியுள்ளது. 

மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவ.16ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சபரிமலை கோயிலுக்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் வருவதால், பல வசதிகள் போதுமானதாக இல்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

கடந்த வருடம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எப்போதும் கோயிலை சுற்றி போராட்டக்காரர்கள் நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், போலீசாரால் அந்த பகுதி முழுவதும் கடுமையான கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக பக்தர் ஒருவர் கூறும்போது, தற்போதைய சூழல் மிகவும் அமைதியாக உள்ளதாகவும், பக்தர்களுக்கு எந்த கட்டுபாடுகளும் விதிகப்படவில்லை என்று கூறினார். நேற்றைய தினம் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாது பக்தர்கள் மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர். 

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் தரிசனம் மேற்கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு வழக்கை, 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், பெண்கள் கோயிலுக்குள் செல்ல தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு வெளியான மறுநாள் சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள ஆந்திராவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழுவினரில் 10 பெண்கள் பம்பை வரை வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளால் பேசி திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த முறை தரிசனம் மேற்கொள்ள வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினர். இந்த முறை, கோயிலுக்குள் பெண்கள் செல்வதை ஊக்கப்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

.