This Article is From Jan 05, 2019

தமிழகத்தில் நீடிக்குமா கடும் பனி? என்ன சொல்கிறார் வெதர்மேன்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இரவு நேரங்களில் கடும் பனி நீடித்து வருகிறது. இந்த பனிப்பொழிவானது பொங்கல் வரை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீடிக்குமா கடும் பனி? என்ன சொல்கிறார் வெதர்மேன்

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதவில் கூறியிருப்பதாவது,

தமிழக்தில் நிலவும் கடும் பனியானது வரும் பொங்கல் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் நிலவும் பனியைக் காட்டிலும் ஓசூரில் அதிகமான பனி நிலவுகிறது. மேற்கு மற்றும் உள்மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும்பனி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் நாட்களில் வடமாநிலம் மற்றும் தமிழகத்தில் கடும் குளிர்நிலவும். குறிப்பாகத் தமிழகம், பெங்களூர், மைசூரு ஆகிய நகரங்களில் இயல்பை விட அதிகமான குளிர் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தமான் அருகே உருவாகி இருக்கும் புயலால் தமிழகத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் இதனால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு மழைக்கூட கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.


 

.