This Article is From Dec 31, 2018

துப்பாக்கி முனையில் திருடனிடமிருந்து தப்பித்த மாணவன்! நடந்தது என்ன?

கரண் சவுதரி என்னும் அந்த மாணவன், தனது சாதுரியத்தால் திருடனை வீழ்த்திய காட்சி!

துப்பாக்கி முனையில் திருடனிடமிருந்து தப்பித்த மாணவன்! நடந்தது என்ன?

கரண் சவுதரி என்னும் அந்த மாணவன், தனது சாதுரியத்தால் தீருடனை வீழ்த்திய சம்பவம்.

ஹைலைட்ஸ்

  • Student foiled attempt to loot him at petrol pump in Delhi's Shahdara
  • He said he was attacked by a man who asked for his bike key
  • He said he people at petrol pump refused to help when he ran towards them
New Delhi:

டெல்லியில் உள்ள ஷாஹாதாராவில் என்னும் இடத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று, தன்னை துப்பாக்கி முனையில் திருட வந்த நபரை சாதுர்யமாக மாணவன் வீழ்த்தினான்.

கரண் சவுதரி என்னும் அந்த மாணவன் காலை 6 மணி அளவில் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தினான். வாகனத்தில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு வெளியே வந்ததும் அங்கு பதுங்கி இருந்த திருடன், கரணை துப்பாக்கி முனையில் மிரட்டினான். மேலும் அவரை வண்டியில் இருந்து இறங்க சொன்ன அத்திருடன் அவரைத்  வண்டிச் சாவியை தன்னிடம் தரும்படி மிரட்டினான். 

அப்பொழுது இருந்த இக்கட்டான சூழ்நிலையில் கரண், தனது யுக்தியை பயன்படுத்தி அத்திருடனிமிருந்து துப்பாக்கியை வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த திருடன் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் போய் உதவி கேட்டும் கிடைக்காததால் அங்கிருந்த அறைக்குள் ஓடி ஒளிந்து  அறையை பூட்டிக்கொண்டான். சிசிடிவி கேமராக்களில் பதிந்த இந்த காட்சிகள் அந்த மாணவனின் துணிச்சலை காட்டியது.

இச்சம்பவத்தை குறித்து கரணிடம் கேட்டபோது ‘ அத்திருடனிடமிருந்து துப்பாக்கியே வாங்குவதுதான் கடினமாக இருந்தது, அதை எப்படியோ வாங்கிவிட்டேன், என்ன செய்வதென்று தெரியாமல் ஓடிவிட்டான்' என கூறினார்.

.