हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 21, 2019

மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்வயரில் சிக்கி விழுந்து நொறுங்கியது! 3 பேர் பலி!!

மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மாநில போலீசார், துணை ராணுவத்தினர் என ஏராளமானோர் பங்கெடுத்துள்ளனர்.

Advertisement
இந்தியா (with inputs from PTI)

உத்தரகாண்ட் வெள்ளத்தில் மட்டும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று மின் வயரில் சிக்கி விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 35 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 6 ஆயிரம்பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மாநில போலீசார், துணை ராணுவத்தினர் என ஏராளமானோர் பங்கெடுத்துள்ளனர். 

இதில் உத்தரகாசி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் ஒன்று ஈடுபட்டிருந்தது. அப்போது, மின் வயரில் சிக்கிய ஹெலிகாப்டர் தடுமாறிச் சென்று விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட், உதவி பைலட், மற்றும் இன்னொரு நபர் என 3 பேர் உயிரிழந்தனர். 

Advertisement

கடந்த 2013-ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதில் 900 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 5 ஆயிரம் சாலைகள், 200 பாலங்கள் உள்ளிட்டவற்றை இந்த வெள்ளம் சேதப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

(With inputs from PTI)

Advertisement
Advertisement