Read in English
This Article is From Jun 20, 2018

மூதாட்டிக்கு உதவிய இளைஞரின் வீடியோ வைரல்

45 நிமிடங்களாக உதவிக்காக காத்திருந்த பெண்ணிற்கு எவரும் உதவ முன்வராத நிலையில், 24 வயது குத்துச்சண்டை வீரர் குவிண்டைன் உதவி செய்துள்ளார்

Advertisement
விசித்திரம் (c) 2018 The Washington Post
ஜார்ஜியா நாட்டின் ஸ்மிர்னா மாகாணாத்தில் நடுவழியில் தத்தளித்து வந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சக்கர நாற்காலியில் தள்ளியபடி வீட்டில் சேர்த்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

67 வயது மாற்று திறனாளி பெண்ணின் சக்கர நாற்காலி சாலை ஓரத்தில் மாட்டி கொண்டது. 45 நிமிடங்களாக உதவிக்காக காத்திருந்த பெண்ணிற்கு எவரும் உதவ முன்வராத நிலையில், 24 வயது குத்துச்சண்டை வீரர் குவிண்டைன் உதவி செய்துள்ளார்.

"நான் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன். சக்கர நாற்காலியை இழுத்து வைக்கும் அளவு எனக்கு ஆற்றல் உள்ளது" என்று குவிண்டைன் தெரிவித்துள்ளார்.

சாலை ஓரம் மாட்டிக் கொண்டிருந்த சக்கர நாற்காலியை விடுவித்த பின்னர், மாற்றுத் திறனாளி பெலிண்டாவை அவரது வீட்டில் விடவும் குவிண்டைன் உதவ முன்வந்துள்ளார்.

Advertisement
குழந்தை பருவத்திலேயே போலியோ தாக்கியதால், கால்கள் பலவீனமாக இருந்த. எனக்கு உதவி செய்ய யாரையாவது அனுப்ப வேண்டும், என கடவுளை வேண்டிக்கொண்டிருக்கையில், குவிண்டைன் வந்து உதவினார் என்கிறா பெலிண்டா..

பெலிண்டாவின் சக்கர நாற்காலி மாட்டி கொண்ட இடத்தில் இருந்து 30 நிமிட நடை பயணத்தில் அவரது வீடு உள்ளது. குவிண்டைன், பெலிண்டாவை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியபடி வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

Advertisement
வீட்டிற்கு செல்லும் வழியில், குவிண்டைனின் பயிற்சியாளர் டோனி வில்லிங்கம்மை சந்தித்துள்ளனர். குவிண்டைன் நாற்காலியை தள்ளிக் கொண்டு போகும் வீடியோவை எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்.

வைரலான அந்த வீடியோவை 3.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். உலகெங்கிலும் இருந்து அழைப்புகளும் பாராட்டுகளும் குவிண்டைனுக்கு குவியத் தொடங்கியது.

Advertisement
பெலிண்டாவும் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். ஆனால், அவரது வீடியோ வைரலான செய்தியை பின்னரே தெரிந்து கொண்டார். பெலிண்டாவும் குவிண்டைனும் கடந்த வாரம் சந்தித்து கொண்டர். பெலிண்டா குவிண்டைனை தேவாலய்த்திற்கு அழைத்துள்ளார். அதனை ஏற்று வந்த குவிண்டைனுக்கு தேவாலயம் சார்பாக டி-சர்டு, 25 டாலர் மதிப்பிலான சீஸ்கேக் ஃபேக்டரி கிப்ட் கார்டு ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டது. குவிண்டைனின் உதவியை பலரும் பாராட்டி உள்ளனர்.

தேவாலயத்தில் கடவுளை பற்றி பேசினால் மட்டும் போதாது, அதை வெளி உலகில் நடைமுறையில் பழக வேண்டும். பிறருக்கு உதவுவதை தொடர்ந்து செய்ய வேண்டும் தேவலயத்தின் பாதிரியார் தெரிவித்தார்.

Advertisement
"நான் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல, என்னால் முடிந்த உதவியை செய்தேன்" என்றார் குவிண்டைன்

"அமெரிக்காவில் அன்பான பக்கத்து வீட்டுகாரர்கள், உதவி செய்பவர்களை இன்றும் காணலாம். பிறருக்கான அன்பை, ஆதரவை. உதவியை தொடர்ந்து செய்ய வேண்டும்" என்றார்.

Advertisement
அதுமட்டுமின்றி, "பொதுவாக ஆப்ரிகன் அமெரிக்கன் வன்முறையில் ஈடுபடுபவர்கள் போன்ற எண்ணங்களை கொண்டிருப்பர். தற்போது ஒரு ஆப்ரிகன் அமெரிக்கனான நான், வித்தியசமாக பார்க்கப்படுகிறேன் என்பதில் மகிழ்ச்சி", என்றார்.

(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement