சட்டம் பயிலும் அப்பா மற்றும் மகள்
ஃபேஸ்புக்கில் அழகான பதிவொன்று பார்த்த அனைவரின் முகத்திலும் புன்னகையை உருவாக்கியது. பிரபலமான ஃபேஸ்புக் பக்கமான ‘ஹியூமன்ஸ் ஆஃப் பம்பாய்' பக்கத்தில் இந்த கதை பகிரப்பட்டுள்ளது. இது ஒரு தந்தை தனது கல்வியின் மீதான ஆர்வத்தை மீண்டு கண்டுபிடித்துள்ளது. தந்தை தன் மகள் படிக்கும் கல்லூரியிலே படித்து வருகிறார். “என் அப்பாவும் சட்டம் படிக்க விரும்பினார். ஆனால் அவரின் பெற்றோர்கள் இருந்த சூழலில் அதை படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக நிறுவனத்தில் ஆலோசகராக பணி புரிந்தார்.
மகள் சட்டம் படிக்கத் தொடங்கவும் அவளுடைய அப்பா அன்றாடம் அவளின் பாடங்கள் குறித்து கேள்வி கேட்கத் தொடங்கினார். இறுதியாக தனக்கு கல்வி மீது இருந்த ஆர்வத்தையும் நிறைவேற்ற நேரம் வாய்த்து விட்டதாக எண்ணி மகளுடன் இணைந்து சட்டம் படிக்கத் தொடங்கிவிட்டார்.
அந்த பெண் எழுதிய பதிவில் “நம்புங்கள் இப்போது எனது தந்தை கல்லூரியில் எனக்கு ஜூனியர். இருவரும் ஒரே கல்லூரியில் பாடம் படித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
அதன்பின் பதிவு முழுவதும் அப்பா மகள் இருவரும் கல்லூரியில் எப்படியெல்லாம் நேரத்தை செலவிடுகிறார்கள், படிக்கிறார்கள், அசைன்மெண்டை முடிக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
ஃபேஸ்புக் பதிவினை கீழே காணலாம்:
பலரும் இந்த அப்பா- மகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்
Click for more
trending news