கொரோனா வைரஸை வெற்றிகரமாக வென்று வீடு திரும்பிய சகோதரியை நடனமாடி உற்சாகமாக வரவேற்ற பெண் ஒருவரின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகளவில் 1.4 கோடிக்கும் அதிகமானோரைப் பாதித்த கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து மீண்டு வந்த தனது மூத்த சகோதரியை இளம்பெண் ஒருவர் வீட்டிற்கு உற்சாகமாக வரவேற்பதை அதில் பார்க்க முடிகிறது.
இதுதொடர்பான வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷூ கப்ரா தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்திருந்தார். அதில், அவர் சகோதரிகளின் டூயட்டை விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட இரண்டு நிமிடங்கள் ஓடும் நீளமான அந்த கிளிப்பில், அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு வெளியே அவரது மூத்த சகோதரியின் வருகைக்காக காத்திருக்கிறார். அவரது சகோதரி தனது வீட்டிற்கான சாலையில் வருவதை பார்த்ததும், சில்லர் பார்ட்டி திரைப்படத்தின் டாய் டாய் ஃபிஷ் என்ற பாடலை ஒலிபரப்புகிறார். தொடர்ந்து, வரும் சகோதரிகளின் மகிழ்ச்சியான நடனம் உங்கள் முகத்தில் ஒர் புன்னகையை ஏற்படுத்தும் என்பது உறுதி.
தேதி குறிப்பிடப்படாத உற்சாக நடன வீடியோவை அதிகாரி காப்ரா பகிர்ந்திருந்த அந்த பதிவில், சகோதரிகளின் டூயட்டை விரும்பியதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு தொற்றுநோயும் ஒரு புன்னகையின் நானோமீட்டரைக் குறைக்க முடியாது, அத்தகைய குடும்பம், அத்தகைய அரவணைப்பு, அன்பு மற்றும் ஆற்றலைப் போற்றும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ நேற்றைய தினம் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், 20,000 பேர் வரை வீடியோவை பார்வையிட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் ரீடிவிட் மற்றும் கமெண்ட் செய்துள்ளனர்.