This Article is From Mar 27, 2019

இனி விண்வெளி மார்க்கமாகவும் இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ளும்: பிரதமர் மோடி #Highlights

தேர்தல் சமயத்தில், பிரதமர், நாட்டு மக்களிடம் உரையாட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி விண்வெளி மார்க்கமாகவும் இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ளும்: பிரதமர் மோடி #Highlights

பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்று காலை 11:45 முதல் 12 மணிக்குள் நாட்டு மக்களிடம் ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச உள்ளேன். இந்த உரையாடலை டிவி, ரேடியோ மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பாருங்கள்' என்று முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடி உரையின் லைவ் அப்டேட்ஸ்: 

Mar 27, 2019 12:50 (IST)
இன்றைய சோதனை வரும் தலைமுறைகளிலும் பிரதிபலிக்கும்: பிரதமர் மோடி
Mar 27, 2019 12:46 (IST)
மிஷன் சக்தி திட்டம் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி. நாம் எல்லோரும் இது குறித்து பெருமைப்பட வேண்டும். தரை வழியாக, நீர் வழியாக மற்றும் ஆகாய வழியாக மட்டுமல்ல, இனி நாம் விண்வெளி வழியாகவும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்தியா, இந்த சோதனையின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது- பிரதமர் மோடி
Mar 27, 2019 12:41 (IST)
இந்த சோதனைக்குப் பிறகும், விண்வெளி மூலம் போர் தொடுக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம்- பிரதமர் மோடி
Mar 27, 2019 12:39 (IST)
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சோதனையை இந்தியாதான் செய்துள்ளது- பிரதமர் மோடி
Mar 27, 2019 12:36 (IST)
விண்வெளியில் இந்தியா புதிய சாதனை புரிந்துள்ளது- பிரதமர் மோடி
Mar 27, 2019 12:36 (IST)
இந்தியா தற்போது முக்கிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
Mar 27, 2019 12:34 (IST)
இது நாடு பெருமைப்பட வேண்டிய நேரம், பிரதமர் மோடி பேச்சு
.