This Article is From Apr 17, 2020

ஏப்ரல் 17-ல் சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சென்னையில் 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் சென்னை மாநகராட்சித் தகவல் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 17-ல் சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

தமிழகத்தில் இதுவரை 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். 

ஹைலைட்ஸ்

  • சென்னையில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது
  • தமிழகத்தில் இதுவரை 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 180 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். 

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சித் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (17.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 4

மணலி - 0

மாதவரம் - 3

தண்டையார்பேட்டை - 20

ராயபுரம் - 65

திரு.வி.க நகர் - 32

அம்பத்தூர் - 0

அண்ணா நகர் - 23

தேனாம்பேட்டை - 18

கோடம்பாக்கம் - 24

வளசரவாக்கம் - 5

ஆலந்தூர் - 3

 அடையார் - 7

பெருங்குடி - 7

சோழிங்கநல்லூர் - 2

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 4

ஏப்ரல் 17 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 217 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.