This Article is From Apr 24, 2020

சென்னையில் 400-ஐ தொட்ட கொரோனா பாதிப்பு - எந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம்?

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 90 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 400-ஐ தொட்ட கொரோனா பாதிப்பு - எந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம்?

இதுவரை மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
  • தமிழகத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
  • சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரத்தில் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 90 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. 

இதன் அடிப்படையில் தற்போது 908 பேர் மட்டுமே (Active Cases) தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகபட்சமாக 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (22.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 13

மணலி - 1

மாதவரம் - 3

தண்டையார்பேட்டை - 56

ராயபுரம் - 118

திரு.வி.க நகர் - 49

அம்பத்தூர் - 1

அண்ணா நகர் - 35

தேனாம்பேட்டை - 45

கோடம்பாக்கம் - 36

வளசரவாக்கம் - 13

ஆலந்தூர் - 9

 அடையார் - 10

பெருங்குடி - 8

சோழிங்கநல்லூர் - 2

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1

ஏப்ரல் 24 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

.