Coronavirus in Chennai: ஏப்ரல் 30 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 767 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- நேற்று மட்டும் சென்னையில் 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
- தமிழகத்தில் நேற்று 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
Coronavirus in Chennai: தமிழகத்தில் நேற்று 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 94 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,162 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,210 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 922 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (29.04.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 16
மணலி - 1
மாதவரம் - 4
தண்டையார்ப்பேட்டை - 77
ராயபுரம் - 189
திரு.வி.க நகர் - 169
அம்பத்தூர் - 20
அண்ணா நகர் - 73
தேனாம்பேட்டை - 85
கோடம்பாக்கம் - 63
வளசரவாக்கம் - 30
ஆலந்தூர் - 9
அடையாறு - 19
பெருங்குடி - 9
சோழிங்கநல்லூர் - 2
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1
ஏப்ரல் 30 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 767 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 215 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 536 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து திரு.வி.க நகர் மண்டலத்தில் 169 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 85 பேருக்கும், தண்டையார்ப்பேட்டை மண்டலத்தில் 77 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில் 73 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.