This Article is From May 18, 2020

சென்னையில் குறையாத கொரோனா தொற்று பரவல்: மண்டல வாரியாக என்ன நிலவரம்..?

மே 18 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 6,750 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குறையாத கொரோனா தொற்று பரவல்: மண்டல வாரியாக என்ன நிலவரம்..?

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 78 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமாகவே இருந்து வருகிறது
  • வட சென்னையில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது

தமிழகத்தில் நேற்று 639 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 480 பேர். ஒட்டுமொத்த அளவில் 11,224 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,172 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 6,971 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 78 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (17.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 147

மணலி - 86

மாதவரம் - 121

தண்டையார்ப்பேட்டை - 581

ராயபுரம் - 1,185

திரு.வி.க நகர் - 790

அம்பத்தூர் - 317

அண்ணா நகர் - 554

தேனாம்பேட்டை - 746

கோடம்பாக்கம் - 1,041

வளசரவாக்கம் - 522

ஆலந்தூர் - 80

 அடையாறு - 367

பெருங்குடி - 86

சோழிங்கநல்லூர் - 95

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 32

மே 18 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 6,750 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,498 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 53 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 5,167 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

.