This Article is From May 23, 2020

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10,000-ஐ நெருங்குகிறது; மண்டல வாரியாக விவரம்!

மே 23 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 9,364 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

இதுவரை தமிழகத்தில் 98 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

Highlights

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையிலேயே ராயபுரம் மண்டலத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது
  • சென்னையிலேயே ஆலந்தூர் மண்டலத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 569 பேர். ஒட்டுமொத்த அளவில் 14,753 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 846 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 7,128 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,524 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 98 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (22.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 250

Advertisement

மணலி - 115

மாதவரம் - 192

Advertisement

தண்டையார்ப்பேட்டை - 881

ராயபுரம் - 1,768

Advertisement

திரு.வி.க நகர் - 1,079

அம்பத்தூர் - 402

Advertisement

அண்ணா நகர் - 783

தேனாம்பேட்டை - 1,000

Advertisement

கோடம்பாக்கம் - 1,300

வளசரவாக்கம் - 650

ஆலந்தூர் - 100

 அடையாறு - 513

பெருங்குடி - 137

சோழிங்கநல்லூர் - 148

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 46

மே 23 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 9,364 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement