சிகாகோவில் ரயில் தண்டாவாளங்கள் தீ பற்றி எரியும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சிகாகோவில் ரயில் தண்டாவாளங்கள் தீ பற்றி எரியும் புகைப்படங்கள் பலருக்கு ஏன் இப்படி தீ வைக்கப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் அவர்கள் அதனை ஒரு நல்ல விஷயத்துக்காக செய்கிறார்கள். உறை வெப்பநிலையிலிருந்து தண்டவாளங்களை பாதுகாத்து ரயில்களை இயக்க இதனை செய்கிறார்கள்.
அமெரிக்காவின் மிட்வெஸ்ட் மாகாணங்களில் நிலவும் குளிர் அண்டார்டிக் பகுதியை மொத்த வெப்பநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. உறைபனியால் ரயில் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க மெட்ரா ரயில் சேவை தண்டவலங்களில் தீ வைக்கிறது. இதனால் தண்டவாளங்களில் உள்ள பனி நீக்கப்பட்டு சேவை பாதிக்கப்படாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
தண்டவாளங்களை மண்ணெண்ணெய் கொண்டு தீ வைப்பதால், அவை விரிவடைவதை ரயில்வே நிர்வாகிகள் வேலை செய்து இணைத்து வருகின்றனர்.
இந்த மொத்த செயல்பாட்டையும் படங்கள் மற்றும் வீடியோக்களாக அப்பகுதி மக்கள் பதிவு செய்வது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மெட்ரா அதிகாரிகள் "இதனால் ரயில்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை. ரயில் டீசல் அழுத்தத்தையும் வெப்பத்தையும் தருமே தவிர, தீயை ஏற்படுத்தாது" என்றனர்.