Read in English
This Article is From Apr 01, 2019

மார்பக கேன்சர் நோயாளிகள் இதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இதை செய்வது அவசியம்…! ஆய்வு கூறும் பதில்

மார்பக புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையினால் இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. மேலும் உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையினால் இதய நோய் அதிகரிக்கிறது.

Advertisement
Health

இந்த உடற்பயிற்சியை அமெரிக்கன் புற்றுநோய் சங்கம் கூறிய வழிகாட்டுதலின் படி செய்தனர்.

உடற்பயிற்சி செய்வதால் மார்பக புற்று நோயால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மார்பக புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி  சிகிச்சையினால் இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. மேலும் உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் இதய நோயினை அதிகரிக்கிறது. 

16 வார உடற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற நோயாளிகள்  இதய நோய்க்கான அபாயத்தை கணிசமாக குறைத்துள்ளனர். ஆரம்ப கால மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் மாரடைப்புக்கு முக்கிய காரணம் இதயநோய் ஆகும் என்று தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர் க்யுவான் லீ தெரிவித்துள்ளார். 

“இந்த ஆய்வு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் மருத்துவ நடைமுறையில் உடற்பயிற்சியை ஒருங்கிணைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இதய நோயைக் குறைப்பதில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார். 

Advertisement

இந்த ஆய்வு ஆன்காலஜி பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு மருத்துவ சோதனையாக நடத்தப்பட்டது. 100 பெண்களில், ஒபிசிட்டி மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையில் உள்ள பெண்களும் புற்றுநோயினால் முதல் மற்றும் இரண்டாம் ஸ்டேஜ்ஜில் உயிர் பிழைத்தவர்களும் அடங்குவர். 

16 வார பயிற்சியில் கண்காணிக்கப்பட்டனர். முதல் இரண்டு நாட்கள் 80 நிமிடம் ஏரோபிக் உடற்பயிற்சியும் மூன்றாவது நாள்  50 நிமிடங்கள் உடற்பயிற்சியும் செய்தனர். இந்த உடற்பயிற்சியை அமெரிக்கன் புற்றுநோய் சங்கம் கூறிய வழிகாட்டுதலின் படி செய்தனர்.

Advertisement

இந்த கண்டுபிடிப்பு ஆரம்பகட்டமானது மட்டுமே. புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுப்பதால் ஏற்படும் இதய நோய்கள் வீரியமிக்க மருந்துகள்  மூலம் குணப்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இந்த ஆய்வின் அடுத்த கட்டமாக புற்றுநோய் நோயாளிகளின் இதய நோயை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியதாக இருக்கும் என்று ஆய்வாளர் லீ தெரிவித்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement