This Article is From Jul 09, 2019

சோம்பு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

நார்ச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.  

சோம்பு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

ஹைலைட்ஸ்

  • வாய் துர்நாற்றத்தை போக்க சோம்பு சாப்பிடலாம்.
  • செரிமானம் சீராக இருக்க சாப்பிட்ட பின் சோம்பு சாப்பிடலாம்.
  • உடல் எடை குறைக்க சோம்பு சாப்பிடலாம்.

ஹோட்டல்களுக்கு சென்று திருப்தியாக சாப்பிட்டு முடித்தபின் சோம்பு சாப்பிடுவதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம்.  இந்த சோம்பு சாப்பிடுவதால் செரிமானம் சீராக இருப்பதோடு உடல் எடை குறைக்கவும் உதவும்.  உடலில் மெட்டபாலிசத்தின் செயல்பாடு சீராக இருந்தால் தான் உடல் எடையும் விரைவாக குறையும்.  ஆரோக்கிய நன்மைகள் தவிர வாய் துர்நாற்றம் போக்க சோம்பு சாப்பிடலாம்.  சோம்பை மசாலா சாய் மற்றும் மற்ற குழம்பு தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.  மேலும் சோம்பின் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.  
 

fkvj104o

 செரிமானத்தை சீராக வைக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், வாயு தொல்லையை போக்கவும், அசிடிட்டி, வயிற்று வலி போன்றவற்றை குணமாக்கவும் சோம்பு சாப்பிடலாம்.  புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகிய அனைத்தும் சேர்ந்தது தான் ஆரோக்கியமான உணவு.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதும் உடல் எடை குறைக்க உதவும்.  உடற்பயிற்சியினால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.  

jbkasku8

 அதனால் உங்களுடைய பெரும்பாலான உணவுகளில் சோம்பு சேர்த்து சமைப்பது நல்லது.  இதில் நார்ச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.  

.