வெள்ளரித் தண்ணீர் செரிமானத்திறனை ஊக்குவிக்கிறது
ஹைலைட்ஸ்
- வெள்ளரியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.
- இது ஜீரோ கலோரி கொண்ட பானமாகும்
- வெள்ளரி விதையில் மக்னீசியம் என்ற ஊட்டச்சத்து உள்ளது
குளிர்காலம் சென்று கோடைக்காலம் வந்து விட்டது. கோடைக்கால வெயிலை சமாளிக்க ஜில்லென குளிர்பானங்களை குடிக்கத் தோன்றும். இதற்காக ஆரோக்கியமற்ற கேன் ஜூஸ், கார்பனேட்டட் பானங்கள், இனிப்பான குளிர்பானங்களை குடிக்கக் கூடாது. குளிர்பானங்களில் அதிகம் கலந்திருப்பது பிரசர்வேடிவ்கள் மற்றும் செயற்கை இனிப்பு மட்டுமே உள்ளன. இந்தக் கட்டுரை உடலுக்கு ஆரோக்கியம் தரும் பானங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
கோடைக்காலம் என்றாலே வெள்ளரிக்காய் விளைச்சலும் காலமும் இதுதான். வெள்ளரிக்காய் 90 சதவீதம் நீரினால் ஆனது. உடல் எடை பராமரிக்க, இதய நோய்க்கான அபாயத்தையும் வெகுவாக குறைக்கிறது. உடலில் உள்ள கசடுகளையும் நீக்குகிறது. சருமத்திற்கு பொலிவைக் கூட்டுகிறது. செரிமானத்திறனை ஊக்குவிக்கிறது. எலும்பின் நலத்திற்கும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் வெள்ளரிக்காய் பயன்படுகிறது. கண்பார்வைத்திறனை அதிகரிக்கிறது, இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சிலவகை கேன்சர் உருவாகுவதைக் கூட தடுக்கிறது.
கோடைக் காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான குளிர்பானங்கள் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காய் ஊறவைத்த தண்ணீர் உடலில் உள்ள கசடுகளை நீக்குகிறது. ஆரோக்கியமான இந்த பானத்தை எளிதாக தயார் செய்து விட முடியும். வெள்ளரித்தண்ணீரில் பல நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. உடலில் உள்ள கசுடுகளை வெளியேற்றி உடலை டி-டாக்ஸ் செய்கிறது. வயிறை நிறைத்துக் கொடுப்பதால் அதிகளவு உணவினை சாப்பிடுவதை இயல்பாக குறைத்து விடுகிறது.
இந்த வெள்ளரித் தண்ணீர் ஜீரோ கலோரி கொண்டது. உடல் எடைகுறைக்க வெள்ளரித் தண்ணீரை குடிப்பது எளிமையான வழியாக இருக்கும். கடும் கோடை வெயில் உடல் நீர்ச்சத்து வற்றிப்போக வாய்ப்புகள் அதிகம். கோடைக் கால காய்கறியான வெள்ளரிக்காய் இந்த குறையை வெகுவாக தீர்த்து விடுகிறது.
வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து உடல் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைத்து விடுகிறது. வெள்ளரியில் உள்ள விதைகளில்தான் மக்னீசியம் உள்ளது. மக்னீசிய குறைபாடு உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடலாம்.
வயிற்று வலி மற்றும் அடிவயிற்று பிடிப்பு ஆகிய பிரச்னைகளை தீர்க்கிறது. இந்த தண்ணீரில் புதினா சேர்த்து கொள்ளலாம் வாசனையாகவும் கூடுதல் சுவையுடனும் இருக்கும்.