காங்கிரஸ் மற்றும் பாஜக அரசியல் செய்கின்றன என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Thiruvananthapuram: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டது. இருப்பினும் பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
சபரிமலையில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. சபரிமலை கோயிலை ஒருபோதும் போர்க்களமாக மாற்ற நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதி செய்கிறோம்.
பெண் பக்தர்களைத் தடுத்து சபரிமலையை போர்க்களமாக ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக மாற்ற வேண்டும் என்பது சங் பரிவாரங்களின் திட்டமாகும்.
சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் சபரிமலைப் பகுதியில் முகாம் அமைத்துத் தங்கி இருந்தனர். அவர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து பெண் பக்தர்களைத் தடுத்தனர். அவர்கள் நிச்சயம் பக்தர்கள் இல்லை, ஐயப்ப பக்தர்கள் போர்வையில் முகமூடி அணிந்தவர்கள். கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் மீது இதற்கு முன் இப்படித் தாக்குதல் நடந்தது இல்லை.
''10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக இந்த தீர்ப்பை வரவேற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியனர். தற்போது இதில் அரசியல் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, கேரள வரலாற்றில் இதுவே முதல்முறை என்றும் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.