This Article is From Sep 21, 2018

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 84 பேர் உயிரிழப்பு

பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மத்திய, மாநில சுகாதாரத்துறை குழுக்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளன. காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 84 பேர் உயிரிழப்பு

உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்

Bareilly:

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களாக பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு மொத்தம் 84 பேர் உயிரிழந்தனர். இந்த பிரச்னை தொடர்பாக மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பரேலி மாவட்டத்தில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். புதான் மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 23-ஆக உள்ளது. 

பரேலியில் உயிரிழந்தவர்களில் 12 வயது சிறுவன் ஓம்காரும் ஒருவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து அவரது தந்தை கூறும்போது, என் மகனுக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தது. இதையடுத்து எங்கள் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவனைக்கு கொண்டு சென்றேன். அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் எனது மகன் உயிரிழந்து விட்டதாக கூறினார். 
ஒவ்வொரு மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்கு மத்திய, மாநில சுகாதாரக்குழுக்கள் விரைந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பத்மாகர் சிங் கூறுகையில், “ முதல்கட்ட விசாரணையில் இந்த காய்ச்சல் டைஃபாய்டு மற்றும் மலேரியா வகையை சேர்ந்தது. மருந்துகள், கொசுவலை உள்ளிட்டவற்றை விநியோகித்து வருகிறோம். காய்ச்சல் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றார். 
மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பரேலி, புதான், ஹர்டோய், சீதாப்பூர், பஹ்ரைச், ஷாஜஹான்பூர் ஆகியவை தலைநகர் லக்னோவுக்கு அருகில் உள்ளன. 

.