Read in English
This Article is From Apr 26, 2019

இலங்கையை தொடர்ந்து தாக்குதல் நடக்க வாய்ப்பு! ஹை அலெர்ட்டில் கர்நாடகா!!

Sri Lanks Bomb Blasts : தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. விசாரணையில் பன்னாட்டு நிறுவனங்களும் இறங்கியுள்ளன.

Advertisement
இந்தியா Edited by

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 320-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Bengaluru:

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை போல கர்நாடகாவிலும் நடத்தப்படலாம் என சந்தேகிக்கப்படுவதால் பெங்ளூரு, மைசூரு ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷ்னர் சுனில் குமார் கூறுகையில், ‘பதற்றம் நிறைந்த பகுதிகள், மார்க்கெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், மல்டி ப்ளக்ஸ், ஏர்போர்ட், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓட்டல்கள் பப்புகள், ரெஸ்டாரண்ட், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பை பலப்படுத்திக கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். சிசிடிவி கண்காணிப்பு, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவற்றை தங்களது இடங்களில் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

மத்திய உளவுத்துறை எங்களுக்கு அவ்வப்போது தகவல்கள் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. நாட்டின் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூரு இருக்கிறது.

Advertisement

இங்கு ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அனைவருக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது போலீசுக்கு முடியாத காரியம். எனவே முடிந்தவரை ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் நடந்து கொண்டு அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

பெங்களூரு மற்றும் மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Advertisement