This Article is From Jul 28, 2018

வழியே இல்லாத இடத்தில் கட்டிடம் கட்ட யார் அனுமதி கொடுத்தது? சென்னை ஐகோர்ட் காட்டம்

'போய் வரவே வழி இல்லாத இடத்தில், 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட, ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது

Advertisement
தெற்கு Posted by

'போய் வரவே வழி இல்லாத இடத்தில், 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட, ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது, என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது என இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விளக்கம் அளிக்க உத்தரவிடப் பட்டிருக்கிறது.

'வருவாய் துறையினர் அளித்த நில வரை படத்தை ஆராய்ந்ததில், அண்ணா சாலையில் இருந்தோ, வேறு எந்த சாலையில் இருந்தோ வருவதற்கு எந்த வழியும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது' என நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியுள்ளது.

"வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வடக்கே அடையாறும், கிழக்கே தோபிகானாவும், மேற்கே நீர்க்கால்வாயும் சூழ்ந்துள்ள இப்பகுதிக்கு உள்ளே போய் வெளியே வர எந்த வழியும் இல்லை" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Advertisement

"இப்பகுதிக்கு அண்ணா சாலையில் இருந்தோ வேறு ஏதும் சாலையில் இருந்தோ வருவதற்கு வழி இல்லை. ஏன் என்றால் இதற்கு தெற்கிலுள்ள இடம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானது. இப்படி இருக்கையில் இங்கு குடியிருப்புகள் கட்ட எப்படி அனுமதி தரப்பட்டது?" என்று கோர்ட் வினவியுள்ளது. வெள்ள அபாயப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியில், குடியிருப்பு கட்ட தடை இல்லாச் சான்றளித்த நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு பார்வை பறிபோயிருக்கவும் வாய்ப்பில்லை, என்று நீதிபதிகள் காட்டமாக விமர்சித்துள்ளனர். தாங்கள் பார்த்த படங்களின் வாயிலாக அனுமதி அளிக்கப்பட்ட இடத்துக்கும் அடை'யாறுக்கும் இடைவெளியே இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து மேலும் தகவல்களை அறிக்கையாக அளிக்குமாறு, சென்னை நதிகள் மீட்பு சங்கத்தை, கோர்ட் கேட்டுக்கொண்டது. இதில் தமிழக அரசையும் எதிர்வாதியாக உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 2-க்கு ஒத்திவைத்ததுள்ளது.

Advertisement
Advertisement