மின் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு நூற்பாலைகளின் சங்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முழுவதும் காற்றாலை மின்சாரத்தை நம்பி இருப்பதாகவும், இது வேண்டுமென்றே செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருபாகரன் வரும் செப்டம்பர் 28-ம் தேதிக்குள் எரிசக்தி துறை செயலர் முகமது நசிமுதீன் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலர் விக்ரம் கபூர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அப்போது, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, மின் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய நிதிபதி, “மின்சாரம் என்பது மனித வாழ்வுக்கு அத்தியாவசியம். 10 நிமிடம் கூட மின்சாரம் இன்றி இருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்கும்போது மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)