This Article is From May 24, 2018

நிபா வைரஸால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழு நியமனம்

நிபா வைரஸுக்கு தற்போது இருக்கும் ஒரே சிகிச்சை, தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் என்று WHO தெரிவித்துள்ளது.

நிபா வைரஸால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழு நியமனம்

நிபா வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது

ஹைலைட்ஸ்

  • இன்னும் வைரஸை எதிர்கொள்ள மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை
  • மேலும், மூவர் இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்
  • மிருகங்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்
New Delhi: நிபா வைரஸ் மூலம் கேரளாவில் மூன்று பேர் இறந்துள்ளனர். இவர்களின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மருத்துவக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. 

இந்தக் குழுவின் தலைவராக, தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், `மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்து கேரள நிபா வைரஸ் இறப்பு குறித்து ஆய்வு செய்ய பணித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர். இந்த வைரஸ் வௌவ்வாள்களால் பரப்பப்பட்டு வருகிறது என்று சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவக் குழுவில், பல்வேறு அரசு துறையிலிருக்கும் மருத்துவர்கள் இருக்கின்றனர். கேரள சுகாதாரத் துறையிடமும் மத்திய சுகாதாரத் துறை அங்கு இருக்கும் நிலைமை குறித்து தொடர்ந்து பேசி வருகிறது' என்று கூறியுள்ளார். 

 மூன்று பேர் இறந்துள்ள நிலையில், இன்னும் மூவருக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் இக்கட்டான நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

நிபா வைரஸ் மனிதர்களுக்கு மட்டமல்லாமல், பன்றிகள் மற்றும் மிருகங்களிடமும் பரவும் அபாயம் இருக்கிறது. இதற்கு சரியான மருந்து இன்னும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸுக்கு தற்போது இருக்கும் ஒரே சிகிச்சை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 
.