மேற்குவங்கத்தில் 18 வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
New Delhi: 2019 மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இத்துடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்தன. இதில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 18 மாநிலங்களிலும், 2 இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
அந்த வகையில், ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆந்திரா பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 80.9 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பீகாரில் 50.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் நடந்த வாக்குப்பதிவில் திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் 79.1 சதவீதமாக நெருங்கி இருந்தது. மேகாலயா மற்றும் மிசோரமில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மேற்கு பகுதிகளில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 59.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த முறை 65.8 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை குறைவாகவே பதிவாகியுள்ளன. இதனால், தங்களது பலத்தை சோதிக்க கூட்டணி அமைத்த அகிலேஷ் மற்றும் மாயாவதி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை 78.8 சதவீத வாக்குகள் பதிவானது. அதனால், கடந்த முறையை ஒப்பீட்டு பார்க்கும் போது மிக குறைவாகும்.