டெல்லி - காந்தகார் FG312 விமானம் மதியம் 3.30 மணிக்கு புறப்பட தயாரானது.
New Delhi: டெல்லி - காந்தகர் விமானம் இன்று புறப்படத் தயாரான சமயத்தில் விமானி தவறுதலாக ஹைஜாக் பட்டனை தவறுதலாக அழுத்தியுள்ளார். இதனால், டெல்லி விமான நிலையத்தில், எச்சரிக்கை நடவடிக்கை தூண்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரியனா ஆப்கான் ஏர்லைன்ஸ் விமானம் 124 பயணிகள், ஒரு கைக்குழந்தை மற்றும் ஒன்பது விமானப் பணியாளர்களுடன் இரண்டு மணிநேர சோதனைக்கு பின் புறப்படத்தயாரனது.
ஹைஜாக் பட்டனை அழுத்தியதால், நாட்டின் அனைத்து பாதுகாப்பு படைகளும் எச்சரிக்கை செய்யப்பட்டது. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு படையும் சோதனையில் ஈடுபட்டது. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு படை கமாண்டோக்கள் மற்றும் பிற அதிகாரிகள் விமானத்தை சுற்றி வளைத்தனர்.
ஹைஜாக் பட்டனை விமானி அழுத்தியதால், நடத்தப்பட்ட இரண்டு மணி நேர சோதனை பயணிகளை பயத்திற்குள்ளாக்கியது. டெல்லி - காந்தகார் FG312 விமானம் மதியம் 3.30 மணிக்கு புறப்பட தயாரானது.
இதுகுறித்து சிவில் விமான பாதுகாப்பு ஆணைய மூத்த அதிகாரி கூறுகையில், விமானி தவறுதலாக ஹைஜேக் பட்டனை அழுத்தியதும், தனிமை படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின்பே விமானம் புறப்படத் தயாரானதாக தெரிவித்தார்.
மேலும் மற்றொரு அதிகாரி கூறுகையில், விமானி தவறுதலாக பட்டனை அழுத்தியது உறுதி செய்யப்பட்ட பின்புதான் விமானம் புறப்படத் தயாரானதாக கூறினார்.