இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
Shimla: இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மேலும் 5 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை அங்கு 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 63 பேர் வரை குணமடைந்துள்ளனர், 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில், மாநிலத்தின் மொத்தத பாதிப்பு எண்ணிக்கையில் ஒரு பகுதி ஹாமிர்பூர் மாவட்டத்திலே பதிவாகியுள்ளது.
இதுவரை ஹாமிர்பூர் மாவட்டதில் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோலானில் 21 பேர் உயரிழந்துள்ளனர்.
மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, விமான போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்கி வரும் நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை நாட்டிலே மகாராஷ்டிராவில் தான் அதிகளவிலான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அங்கும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச்.25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியில் இருந்து 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்த போது பிரதமரின் முடிவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் ஆதரவு தெரிவித்தார். அதேபோல், பிரதமருடனான வீடியோ கான்பரன்சிங்கின் போதும், தனது கருத்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாடுகளை தளர்த்திய போதும், அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, அங்கு எந்த கொரோனா பாதிப்பும் பதிவாகவில்லை.