This Article is From Aug 22, 2019

மணாலியில் பாதுகாப்பாக இருக்கிறோம் - படக்குழுவுடன் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சுவாரியார்

மஞ்சு வாரியரியரின் நிலைமை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார் அவருடைய சகோதரர். இதையடுத்து மீட்புப்படையினர் விரைந்து சென்று படக்குழுவினரை மீட்டனர்

மணாலியில் பாதுகாப்பாக இருக்கிறோம் - படக்குழுவுடன் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சுவாரியார்

ஷியாகோரு மற்றும் சத்ரு பிராந்தியங்களில் ஆறு நாட்கள் சிக்கி தவித்தனர்.

New Delhi:

இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், மலைப்பகுதியில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியார் உள்ளிட்ட படக்குழுவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். ‘கைட்டம்' என்ற மலையாளப்படத்தின் படப்பிடிப்பிற்காக இயக்குநர் சனல்குமார் சசிதரன் உள்ளிட்ட 30 பேர் அடங்கிய படக்குழுவுடன் நடிகை மஞ்சுவாரியர் இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக படக்குழு படப்பிடிப்பு நடத்தி வருகிறது.

திங்களன்று மாலை தனது சகோதரர் மதுவுடன் சாட்டிலைட் போன் ஒன்றின் மூலமாக பேசிய மஞ்சு வாரியர் அவர்களின் நிலைமை குறித்து தெரிவித்தார். மேலும் இணைய சேவை, தொலைதொடர்பு வசதிகள் முற்றிலுமாக செயல் இழந்து இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த இடத்தில் 200-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு மட்டுமே உணவு இருப்பதாகவும் கூறியுள்ளார்

மஞ்சு வாரியரியரின் நிலைமை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார் அவருடைய சகோதரர். இதையடுத்து மீட்புப்படையினர் விரைந்து சென்று படக்குழுவினரை மீட்டனர். மீட்கப்பட்ட படக்குழுவினர் தற்போது மணாலியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து படக்குழுவினர் உடனான புகைப்படத்தை பகிர்ந்து “சணல்குமார் சசிதரன், நான் மற்றும் கயாட்ட திரைப்பட குழுவும் மணாலியில் நள்ளிரவில் பாதுகாப்பாக திரும்பி வந்தோம். ஷியாகோரு மற்றும் சத்ரு பிராந்தியங்களில் ஆறு நாட்கள் சிக்கி தவித்த பின்னர் இப்போது நாங்க அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க மகிழ்ச்சியாகவும் நிம்மதியாவும் உள்ளது “ என்று தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகளை விரைவாககவும் பொறுப்புடனும் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

.