This Article is From Jun 04, 2019

தேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் - மு.க ஸ்டாலின்

இந்த திருத்தம் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்றும் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் - மு.க ஸ்டாலின்

இந்தி மொழிதிணிப்புக்கு எதிரான 1965 ஆம் ஆண்டு போராட்டங்களை நினைவு கூர்ந்தார்

Chennai:


திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி மொழியைக் கற்கவேண்டும் என்ற கொள்கை திருத்தியமைக்கப்பட்டது. இந்த திருத்தம் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்றும் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படப் போவதில்லை என்ற உறுதியையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலப்பகுதியில் கருணாநிதி தலைமையிலான போராட்டத்தையும் தமிழ்நாட்டில் இந்தி மொழிதிணிப்புக்கு எதிரான 1965 ஆம் ஆண்டு போராட்டங்களை நினைவு கூர்ந்தார். அந்த மாதிரியான மொழிப்போரினை மீண்டும் தொடங்கும் காலம் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

கல்விக் கொள்கை திருத்தம் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அந்த திருத்தத்திற்கு உரிய விளக்கம் தரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணிக்கட்சிகள் ஒன்றுக் கூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டுமென ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களிடம் கூறியுள்ளார்.

.