Read in English
This Article is From Jun 05, 2019

ஏ.ஆர். ரஹ்மானின் அட்டானமஸ் ட்விட் மத்திய அரசுக்கானதா….?

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானினி ட்விட் ஆளும் மத்திய அரசை கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ளது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

ஏ.ஆர். ரஹ்மான் கல்விக் கொள்கை மாற்றத்திற்கு 'அழகிய திருத்தம என்று பதிவிட்டிருந்தார்.

Chennai:

நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்தால் கல்விக் கொள்கையில் மாற்றத்தைக்கொண்டு வரும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. 

அதன்படி இந்தி கற்காத பிற மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 

இதற்கு தமிழகம் உட்பட பல தென்னிந்திய மாநிலங்கள் பெரும் எதிர்ப்பினை தெரிவித்தன. அதன்பின் அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு  இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அழகிய திருத்தம் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement

அதன் பின் மீண்டும் ஆங்கில வார்த்தை ‘அட்டானமஸ்' என்றவார்த்தை மட்டும் எழுதி அதற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக அகராதியின் பொருளையும் பகிர்ந்துள்ளார். அட்டானமஸ் என்ற வார்த்தைக்கு ‘தன்னாட்சி' என்று பொருளாகும்.  

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானினி ட்விட் ஆளும் மத்திய அரசை கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ளது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement