ரஞ்சித் பச்சன் வலதுசாரி குழுவை அமைப்பதற்கு முன்பு சமாஜ்வாடி கட்சியில் இருந்துள்ளார்.
Lucknow: விஸ்வ இந்து மகாசபையின் நிறுவனர் லக்னோவில் இன்று காலை நடைப்பயிற்சிக்காக வெளியே சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நகரத்தின் பரபரப்பான வணிகப் பகுதியான ஹஸ்ரத்கஞ்சில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரஞ்சித்துடன் சென்ற அவரது உறவினர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவ் கூறும்போது, தாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தங்களது செல்போன்களை ஒருவர் பறித்ததாகவும், அப்போது துப்பாக்கியால் பலமுறை சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில், ரஞ்சித் பச்சன் தலையில் அதிகளவிலான தோட்டாக்கள் பாய்ந்ததன் காரணமாக சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார். ஆதித்யாவுக்கு கையில் மட்டும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சம்பவ இடத்தில் இருந்து பீகாரின் முங்கர் பகுதியில் உருவமைக்கப்பட்ட போர் துப்பாக்கி ஒன்று சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் பச்சன் வலதுசாரி குழுவை அமைப்பதற்கு முன்பு சமாஜ்வாடி கட்சியில் இருந்துள்ளார். சமீப காலத்தில் வலதுசாரி அமைப்பின் தலைவர் லக்னோவில் சுட்டுக்கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆக்டோபரில் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி அவரது வீட்டிலே சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது முகத்தில் துப்பாக்கியால் சுட்டதோடு, 15 முறை கத்திதயாலும் குத்தப்பட்டார். தொடர்ந்து, மருத்துவமனை அழைத்துச்செல்லும் வழியிலே கமலேஷ் உயிரிழந்தார்.
தீபாவளி வாழ்த்து தெரிவித்துவிட்டு பலகாரங்கள் வழங்க செல்வதாக அவரை பார்க்க சென்ற கும்பல் கமலேஷ் மீது இந்த தாக்குதலை நிகழ்த்தியது. இது சம்பந்தமாக ஹூசைன் (34), பதான் (27) ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.