காந்தியின் உருவப்படத்தை சுடும் பூஜா பாண்டே.
Aligarh: காந்தியின் உருவப்படத்தை சுட்ட ஹிந்து மகாசபையின் பொதுச்செயலாளர் பூஜா பாண்டே கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 30-ம் தேதி காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அப்போது உத்தர பிரதேசத்தின் அலிகாரில் காந்தியின் உருவப்படத்தை பூஜா பாண்டே என்பவர் சுட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணைய தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த வாரம் அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த தினத்தன்று வீடியோவில் பேசிய பூஜா பாண்டே, ஆண்டுதோறும் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை சுடுவோம் என்று பேசினார். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வலது சாரி அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார். ஜனவரி 30-ம் தேதியன்று சில வலதுசாரி அமைப்புகள் கோட்சேவை புகழ்ந்து பேசி வருகின்றன.