This Article is From Aug 28, 2018

நெல்லையில் விநாயகர் சதூர்த்திக்கு ‘கெடுபிடி’: இந்து முன்னணி எதிர்ப்பு

இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பொதுச் செயலாளர் அரசுராஜா ஆகியோர் ஆட்சியரைப் பார்த்து தங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.

Advertisement
தெற்கு Posted by (with inputs from PTI)

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்கு தேவையில்லாத பல கெடுபிடிகள் விதிக்கப்படுவதாகவும் அதை நீக்கக் கோரியும் இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அடுத்த மாதம் வரப் போகும் விநாயகர் சதூர்த்தி விழாவை திருநெல்வேலி கொண்டாடுவதற்கு காவல் துறையும் வருவாய் துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விதிமுறைகளை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த அதிகாரிகள் சிலரை மட்டும் மாவட்ட ஆட்சியரான ஷில்பா பிரபாகர் சதீஷை பார்க்க அனுமதித்தனர். இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பொதுச் செயலாளர் அரசுராஜா ஆகியோர் ஆட்சியரைப் பார்த்து தங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்தனர். அந்த மனுவில், விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு போலீஸாரும் வருவாய் துறையினரும் தேவையில்லாமல் விதித்திருக்கும் கெடுபிடி நடவடிக்கைகளை விளக்கிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement