This Article is From Jul 28, 2018

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்து மஹேஷ் குமார் மலானி

மஹேஷ் குமார் மலானி தார்பார்க்கர்-2 தொகுதியில் போட்டியிட்டு, அந்த தொகுதியில் போட்டியிட்ட 14 பேரை விழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்து மஹேஷ் குமார் மலானி
Islamabad:

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேசிய தேர்தலில் இந்து மதத்தைச் சேர்ந்தவர் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார். முஸ்லிம் அல்லாதோர் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் 16 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது தான் ஒரு இந்து வெற்றி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மஹேஷ் குமார் மலானி, தார்பார்க்கர் -2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட 14 பேரை விழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார்.

மலானி 1,06,630 வாக்குகளைப் பெற்றார். அதற்கு அட்டுத்தபடியாக அராப் சக்குல்லா என்பவர் 87,251 வாக்குகள் பெற்றார்.

2003 - 2008 வரையிலான காலத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சியால் மலானி, பாராளுமன்ற எம்.பியாக நியமிக்கப்பட்டார். இப்போது தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றம் செல்கிறார். இதற்கு முன் மாநில சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற முஸ்லிம் அல்லாத முதல் இந்து மலானி என்பதும் குறிப்பிடத்தக்கது.

.