Kalaburagi: குல்பர்கா: அரசு பள்ளியில் பணியாற்றி வரும் க்ளெர்க் ஒருவர், 45 மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
கர்நாடக மாநில, குல்பர்கா மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர், அரசு பள்ளியில் க்ளெர்க் பணி செய்து வருகிறார். கடந்த ஆண்டு, உடல் நல பிரச்சனை காரணமாக தனது 17 வயது மகள் தானேஷ்வரி உயிரிழந்துள்ளார்.
அவரது மகளின் நினைவாக, குல்பர்கா அரசு கல்லூரியில் பயின்று வரும் 45 மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளின் கல்வி தொகைக்காக 10,000 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
“ஏழை குடும்பங்களில் இருந்து வரும் எங்களால், கல்வித்தொகை செலுத்த முடியவில்லை. எங்களுக்கு பசவராஜ் ஐயா உதவி செய்து வருகிறார்.” என்று எம்.பி.எச்.எஸ் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் பாத்திமா என்ற மாணவி தெரிவித்தார்.
இறந்த தனது மகளின் நினைவாக உதவி செய்து வரும் பசவராஜ், சமூக பணிகள் மேற்கொள்வதற்கான அறக்கட்டளை உருவாக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.