This Article is From Aug 02, 2018

செல்லப்பிராணியின் எச்சிலால் கை, கால்களை இழந்த நபர்: அமெரிக்காவில் நிகழ்ந்த பரிதாபம்

அமெரிக்கா விஸ்கான்ஸின் மாகாணத்தில் வசித்து வரும் கிரேக் - டான் தம்பதியர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள்

செல்லப்பிராணியின் எச்சிலால் கை, கால்களை இழந்த நபர்: அமெரிக்காவில் நிகழ்ந்த பரிதாபம்

அமெரிக்கா விஸ்கான்ஸின் மாகாணத்தில் வசித்து வரும் கிரேக் - டான் தம்பதியர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். குறிப்பாக, நாய்கள் மீது அலாதி பிரியமுடன் கிரேக் பழகி வந்துள்ளார்.

திடீரென்று கிரேக்கிற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், குமட்டல் என்று பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், உடல் நிலை மேலும் மோசமாக, கிரெக்கின் உடல் பகுதிகளில் திட்டு திட்டாக இரத்த பாதிப்பு பரவி வருவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்

கிரேக்கின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். கிரேக் ஆசையாக வளர்த்து வந்த செல்லப்பிராணி நாயிடம் இருந்து நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுவாக, நாய்களில் எச்சிலில் கேப்னோசைட்டோபாகா கெனிமார்ஸஸ் என்ற பாக்டீரியா குடிக்கொள்ளும். பெரும்பாலான சமயங்களில் இந்த பாக்டீரியாக்கள் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், மனித இரத்ததில் கலக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், இந்த பாக்டீரியா மனிதனை கொன்றுவிடும் தன்மை கொண்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

நோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் கிரேக்கின் இரு கால்களும், கைகளும் நீக்கிவிடும் அளவு மோசமானது. இதனால், மரண படுக்கையில் கிரேக் தவித்து வருகிறார். தான் வளர்க்கும் நாய்களுடன் மிகுந்த பாசத்துடன் இருக்கும் கிரேக், நாய்களை கட்டித்தழுவி முத்தம் கொடுத்து அன்பை வெளிபடுத்துபவர் என்று அவரது மனைவி டான் தெரிவித்துள்ளார். தான் ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணியின் எச்சிலில் இருந்து இது போன்ற தொற்று நோய் பரவியதால், கிரேக்கின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பது அனைவரையும் கலங்க செய்கிறது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.