This Article is From Jul 19, 2018

குழந்தை கடத்தல் வதந்தி: மகனை பார்க்க சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

கர்நாடகா: மகனை பார்க்க சென்ற தந்தையை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கருதி ஊர் மக்கள் தாக்கியுள்ளனர்

குழந்தை கடத்தல் வதந்தி: மகனை பார்க்க சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Mandya, Karnataka:

 

 

கர்நாடகா மண்டியா பகுதியில் சேர்ந்த ஒருவர், தனது மகனை காண சென்றுள்ளார். விவாகரத்து பெற்று வாழும் தம்பதியர் என்பதால், மகனை தன்னுடன் வருமாறு தந்தை அழைத்துள்ளார். ஆனால், அவருடன் செல்ல சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை கண்ட ஊர் மக்கள், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுவனை கடத்தி செல்ல முயற்சிக்கிறார் என்று கருதி சிறுவனின் தந்தையை அடித்துள்ளனர்

 

குழந்தை கடத்தல் கும்பலை குறித்து வாட்ஸ் அப்பில் போலி தகவல்கள் பகிரப்படுகிறது.  இந்த பொய் தகவல்களினால், நாடெங்கிலும் உள்ள பல இடங்களில் 20க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர்  சமீபத்தில், கர்நாடகா பிடார் பகுதியில், குழந்தைகளுக்கு சாக்குலேட் அளித்த ஐடி பணியாளரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கருதி, கிராம மக்கள் அடித்து கொன்றனர்

 

அதிகரித்து வரும் உயிரிழப்புகளால், கும்பல் கொலைகளுக்கான தண்டனையை தீவிரப்படுத்தும் நோக்கில் உச்ச நீதிமன்றம் சட்ட திட்டங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

(With ANI inputs)

.