சீனாவின் பிரபல செயலியான டிக்டாக்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
New Delhi: சீன பொருட்களை மத்திய பிரதேச மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.
லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர். இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தார்கள்.
இதன்பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மீண்டும் பதற்றம் ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையையும் இரு நாடும் மேற்கொள்ளாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சீன தயாரிப்புகள், சீன பொருட்கள், சீன உணவுகள் உள்ளிட்டவற்றை புறக்கணிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
சீனாவின் பிரபல செயலியான டிக்டாக்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில் சீன கொடிகள் எரிக்கப்பட்டு வருகின்றன. கோ கொரோனா என முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனமும், 4ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு சீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மக்கள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை வைத்துள்ளார். எல்லையில் நடந்த சம்வத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக நாமும் சீனாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.