This Article is From Dec 26, 2018

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட செய்தி தெரிந்தவுடன் தமிழ்நாட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை ரீதியான விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

எங்கே தவறு இருந்தாலும் மிக கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். இது தொடர்பாக ஆய்வக பணியாளர் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

அந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு நோய் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவதற்கு கூட்டு மருந்து சிகிச்சை உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தினர் எங்கு சிகிச்சை பெற விரும்புகிறார்களோ, அது அரசு மருத்துவமனையாக இருந்தாலும், தனியார் மருத்துவமனையாக இருந்தாலும், அந்த குடும்பம் விரும்புகின்ற அந்த உயர்தர சிகிச்சையை தாயும், சேயும் பெற அரசு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும்.

துறை ரீதியாக மிக மிக கடுமையான நடவடிக்கை எந்த வித பாரபட்சமுமின்றி எடுக்கப்படும். இதுமாதிரியான புகார் இதுவரை எழுந்ததில்லை, முதல் முறையாக இது நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement