This Article is From Dec 26, 2018

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் - ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் ஊழியர் ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றிய உறுதியான தகவல் இல்லை
  • எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞரின் ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது
  • அலட்சிய போக்கு காரணமாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
Chennai:

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கர்ப்பிணி என்பதால் அவரது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அலட்சியம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது.

பின்னர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக தனியார் மருத்துவனையில் சோதித்து பார்த்தபோது கர்ப்பிணியின் ரத்தம் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாகத் தொடங்கியது.

விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் 2 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருக்கிறார். அப்போதே அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் அதுபற்றி அவரிடம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

.