Read in English
This Article is From Mar 14, 2020

தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தி வைப்பு!

ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
தமிழ்நாடு Edited by

வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை நேற்று அறிவித்த உத்தரவில், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளித்திருந்து. மேலும், தமிழகம் முழுவதும் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வடுமுறை அளித்திருந்தது. 

அதன்படி, கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களாகும். 

Advertisement

இந்நிலையில் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்புக்கான காரணம் எதையும் பள்ளி கல்வித்துறை குறிப்பிடவில்லை. 

Advertisement
Advertisement