This Article is From Dec 20, 2019

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு!

இதையடுத்து, நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டு சட்டம் அமலுக்கும் வந்தது. 

இதனிடையே, குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல், புத்தாண்டையொட்டி கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை விடக்கோரி தமிழக அரசின் முதன்மை செயலாளர் கடிதம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையடுத்து, நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, டெல்லியில் நேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித் ஷா ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  குடியுரிமை சட்டம் தொடர்பாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தானாக கலைந்து சென்று விட்டார்கள். போராட்டத்தால் தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

.