This Article is From Oct 01, 2019

டெல்லி திகார் சிறையில் வீட்டுச் சாப்பாட்டு வழங்க ப.சிதம்பரம் கோரிக்கை!!

INX Media case: சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு சாப்பிட்டு சிதம்பரத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுச் சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கொண்டு வந்து, திகார் சிறையில் இருக்கும் தனக்கு வழங்க வேண்டும் என்பது சிதம்பரத்தின் கோரிக்கையாக உள்ளது. 

டெல்லி திகார் சிறையில் வீட்டுச் சாப்பாட்டு வழங்க ப.சிதம்பரம் கோரிக்கை!!

ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி கைது செய்யப்பட்டார்.

New Delhi:

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு வீட்டுச் சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அவரது கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது நாளை மறுதினம் நடைபெறவுள்ள விசாரணையில் தெரிந்து விடும். 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் பிடி இறுகியபோது சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. 

இதையடுத்து அவரை கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, கஸ்டடியில் வைத்தனர். பின்னர் அவர் கடந்த செப்டம்பர் 5-ம்தேதி ஆசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலையான டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். 

அங்கு அவரது அறையில் தலைலயணை மற்றும் நாற்காலி இல்லாததால் முதுகுவலி சிதம்பரத்திற்கு ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். தொடர்ந்து அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு சாப்பிட்டு சிதம்பரத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுச் சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கொண்டு வந்து, திகார் சிறையில் இருக்கும் தனக்கு வழங்க வேண்டும் என்பது சிதம்பரத்தின் கோரிக்கையாக உள்ளது. 

அவரது கோரிக்கை ஏற்கப்படுவது குறித்து நாளை மறுதினம் டெல்லி நீதிமன்றம் முடிவு செய்யும். 

.